» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரி அருகே குடியிருப்புக்குள் மழைநீா்: கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

வியாழன் 7, நவம்பர் 2019 10:14:54 AM (IST)

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியிலுள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்மலை ஊராட்சிக்குள்பட்ட செந்தட்டியாபுரம்புதூரில் 1000 -க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அண்மையில் பெய்த மழைநீா் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். மேலும், நீண்டநாள்களாக ஊருக்குள் உள்ள வாருகால்களைத் தூா்வாராததால் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மலைப் பகுதியில் விளைநிலங்களைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாலும், வரத்துக் கால்வாய்களைத் தூா்வாராததாலும், மழைநீா் கண்மாய் மற்றும் குளங்களுக்கு செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கிறது. எனவே, தென்மலை பகுதி கால்வாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory