» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் : இளைஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதி அறிவுரை

வியாழன் 7, நவம்பர் 2019 12:23:41 PM (IST)சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள்  அறிவுரை கூறினார்.

நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளிக்கு காஞ்சி பீடாதிபதி நேற்று  மாலை விஜயம் செய்தார். பள்ளி தாளாளர் நிர்மல் ரத்தினம் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் பூரண கும்ப மரியாதையுடன் காஞ்சி பீடாதிபதிக்கு வரவேற்பு அளித்தனர். பள்ளி இசைத்துறை சார்பில் வரவேற்பு கவிதை வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசியதாவது: மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போது நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டால் மேற்படிப்பு முடித்து தொழில் மற்றும் வேலைகளை திறம்பட செய்து பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள முடியும். 

கிராமபுற சேவையில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பொதுச் சேவையை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால் இந்தியா மேலும் வளர்ச்சி பெறும். அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணரவேண்டும். அடிப்படை தத்துவத்தில் இருந்து விலகாமல் குழந்தை பருவத்தில் இருந்தே பக்தி நெறியை வளர்க்க வேண்டும். இளைஞர்கள் நவீன தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும். 

கிராமத்தில் நல்ல பழக்க வழக்கத்தை பின்பற்றி பழைய கலாச்சாரத்தை கடைபிடித்து புதிய உலகம் படைக்க வேண்டும். இளைஞர்கள் சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார். கவிதை உறவுகள் அமைப்பின் சார்பில் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியம், முத்துசுவாமி. இளங்கோ பங்கேற்றனர். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சுவாமிகள் பரிசுகள் வழங்கினார். விழாவில் பாளை ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திர மணி, பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் காஞ்சி மடம் மேலாளர் நாராயணன், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory