» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெட்டுவான்குளத்தில் ஆண் உடல் கிடந்ததால் பரபரப்பு

வியாழன் 7, நவம்பர் 2019 1:05:31 PM (IST)

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வெட்டுவான்குளத்தில் ஆடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளை திம்மராஜபுரம் மணிக்கூண்டு அருகே உள்ள வெட்டுவான்குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக பாளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த உடலை மீட்டனர். இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆனதால் உடல் உப்பி காணப்பட்டது. பின்னர் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் மைதீன் (45) என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக குளத்திற்கு சென்றபோது தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory