» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள்

வியாழன் 7, நவம்பர் 2019 1:51:11 PM (IST)

விக்கிரமசிங்கபுரம் மற்றும் செங்கோட்டை பகுதியில் யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவருக்கு சொந்தமான வயல்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. அங்கு அவர் தென்னை, வாழை, கரும்பு ஆகியவை பயிரிட்டிருந்தார்,இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு குட்டி யானை மற்றும் 4 யானைகள் பாண்டிக்கு சொந்தமான வயல்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த தென்னை, வாழை, கரும்பு ஆகியவற்றை நாசப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து இரவு முழுவதும் சப்தங்கள் எழுப்பி யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.

இதேபோன்று செங்கோட்டை அருகே வடகரையில் உள்ள விவசாய  தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் ஒற்றை காட்டு யானை புகுந்து தென்னை மரக்கன்றுகளை பிடுங்கி எரிந்தும், காய்கறி பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து விட்டு சென்றுள்ளது. இது போல் விவசாய நிலங்களை வன விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory