» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கும் விழா

வியாழன் 7, நவம்பர் 2019 4:23:54 PM (IST)ராமானுஜம்புதூரில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மத்தியில் மரம் வளர்ப்பதை ஊக்குவித்திட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தவகையில், கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் ராமானுஜம்புதூர் பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில் விதைப்பந்துகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சனி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை அலுவலர் சுவேகா வரவேற்றார்.

விழாவில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சி பள்ளியின் 500மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற முறையில் மாணவ, மாணவியர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மரம் வளர்க்கவேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் மரம் வளர்த்திட ஏதுவாகத்தான் இந்த விதைப்பந்துகளை நாங்கள் உங்களுக்கு தந்துள்ளோம். பொதுவாக வெறும் விதைகளை மண்ணில் விதைத்தால் கடும் வெப்பத்தால் முளைக்கும் திறனை விதைகள் இழந்து விடும்.  இதனை தவிர்த்திடும் நோக்கத்தில் இந்த விதைப்பந்தானது உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள், வனப்பகுதிகள் போன்ற இடங்களில் தூக்கி வீசி சென்று விடலாம்.

நீங்கள் வீசிய செல்லும் விதைப்பந்துகளின் உள்ளே உள்ள விதைகள் மழை பெய்யும் வரையிலும், எலி, எறும்பு, குருவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருந்து கண்டிப்பாக முளைத்திடும். எனவே நீங்கள் கூட ஓய்வு நேரத்தில் விதைப்பந்துகளை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது நல்ல இடம் பார்த்து வீசி  மரம் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருங்கள் என்றார். இதில், ஆசிரியை&ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தோட்டக்கலைத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

Gnanasekaran v.k maduraiNov 7, 2019 - 08:53:39 PM | Posted IP 162.1*****

100 aaundugal kadanthu thodarnthu vazum....👍👍👍😀👏👏👏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory