» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த மாடுகள் பறிமுதல் : தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை

வியாழன் 7, நவம்பர் 2019 4:41:48 PM (IST)



தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைத்தனா்.

தூத்துக்குடியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி பணியாளா்களுக்கு ஆணையர் ஜெயசீலன் உத்தவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் முன்னிலையில், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் செண்பக பாண்டியன், ஜெயபாலன், முத்தையாபுரம் சிறப்பு எஸ்ஐ பிள்ளை முத்து மற்றும் போலீசார் இணைந்து மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்றிரவு தூத்துக்குடி - திருச்செந்தூ மெயின் ரோடு, முத்தையாபுரம், பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த 7 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.  பின்னர் அவற்றை தெற்கு மண்டல நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5ஆயிரம் அபாரதம் செலத்தினால் மாடுகள் விடுவிக்கப்படும். தவறினால் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடா்ந்து சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால், பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

TuticorianNov 9, 2019 - 12:36:48 PM | Posted IP 173.2*****

இதே போல் தெருவில் திரியும் நாய்களையும் பிடித்து சென்றால் மக்கள் பயமின்றி நடமாடலாம் . மாட்டை விட நாய்களால் மக்களின் உயிருக்கு அதிக ஆபத்து.

கண்ணன்Nov 8, 2019 - 10:49:24 PM | Posted IP 108.1*****

சரியான நடவடிக்கை

MASSNov 8, 2019 - 03:28:03 PM | Posted IP 162.1*****

நன்றி நன்றி .. அப்படியே நாய்களையும் பிடிக்கவும் . மிக நன்றி

சாமிNov 8, 2019 - 10:14:53 AM | Posted IP 162.1*****

சூப்பர் சார்

சாமிNov 8, 2019 - 10:14:53 AM | Posted IP 162.1*****

சூப்பர் சார்

தாஸ்Nov 7, 2019 - 08:25:43 PM | Posted IP 173.2*****

போற்றப்படவேண்டிய நடவடிக்கை . நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory