» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் 10 ம் தேதி மூடல்

வியாழன் 7, நவம்பர் 2019 5:39:10 PM (IST)

மீலாடி நபியை யொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் 10 ம் தேதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 10.11.2019-ஆம் தேதி அன்று மிலாடிநபி திருநாளை முன்னிட்டு அரசாணை எண்.50 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை நாள்.29.10.2012 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் சென்னை, ஆணையாளர் மதுவிலக்கு மற்றும் ஆயம் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன்  இணைந்த மதுபானக் கூடங்கள் எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3, எப்எல்3ஏஏ மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. 

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேற்கூறிய அனைத்து மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள்  10.11.2019 அன்று மூடப்பட்டிருக்கும் எனவும் அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்லக் கூடாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory