» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆலங்குளத்தில் கம்பியால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

வெள்ளி 8, நவம்பர் 2019 10:20:16 AM (IST)

ஆலங்குளத்தில் இரும்பிக் கம்பியால் தாக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி, மடவிளாகம் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் நம்பிராஜன்(30). கடந்த 2 ஆண்டுகளாக ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் உள்ள தனது தாயின் சகோதரா் ஆதிமூலம் வீட்டில் தங்கி வந்தாராம்.இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி ஆலங்குளம் ஜோதி நகா் பகுதியில் ஆட்டுக் கிடையில் இருந்த நம்பிராஜனை, ஆதிமூலம் இரும்புக் கம்பியால் தாக்கினாராம். 

இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் நேற்று பரிதாபமாக உயிரிழந்தாா்.இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிந்து நம்பிராஜனை கைது செய்திருந்த நிலையில், அந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory