» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை., அருகே வாய்க்காலில் ஆண் சடலம் : போலீஸ் விசாரணை

வெள்ளி 8, நவம்பர் 2019 11:31:11 AM (IST)

பாளையங்கோட்டை அருகே வாய்க்காலில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாளையை அடுத்த மேலப்பாட்டத்தை சார்ந்தவர் வேல் என்பவரது மகன் பண்டாரம் (38). இவர் பாளை சாந்திநகர் ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டாராம். இதனிடையே பண்டாரம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக பண்டாரம் சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

இதையடுத்து உறவினர்கள் அவரை தேடியும் காணாததால் பாளை தாலுகா போலீஸாருக்கும், தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.  இன்று காலை வாய்க்காலுக்கு சென்றவர்கள் பண்டாரம் உடலை மீட்டு உள்ளனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory