» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி பொதுநூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் கூட்டம்

வெள்ளி 8, நவம்பர் 2019 12:19:58 PM (IST)

நெல்லை மாவட்டம் தென்காசி பொதுநூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வட்டார நூலகத்தில் 52-வது தேசிய நூலக வாரவிழா 2019 நவம்பர் 13 முதல் 20 முடிய சிறப்பாக நடத்துவது குறித்து வாசகர் வட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசகர் வட்ட பொருளாளர் யோகா டவர்ஸ் சேகர் தலைமை தாங்கினார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். வட்டாரகல்வி அலுவலர் மாரியப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், நூலகர்கள் சுந்தர், ஜூலியா, நிஷா, ராஜேஸ்வரி, பைன் ஆர்ட்ஸ் அகாடமி சேர்மன் சுதாகர், நிர்வாக குழுவினை சார்ந்த விவேக், முகம்மது ராஷித், வாசகர் வட்ட நிர்வாகி குழந்தைஜேசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலக வார விழாவினை நன்கொடையாளர் மூலம் சிறப்புடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விழாவில் தொடக்கவிழா, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், கவிதைப்போட்டி, தனித்திறன் வளர்க்கும் வினாடிவினா, உடற்திறன் வளர்க்கும் யோகா, சிலம்பம், கராத்தே, சதுரங்கம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடத்துவது என்றும்,புத்தக கண்காட்சி, மகாத்மா காந்தி 150ம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சி, நூல்கள் வெளியீடு, நூல்கள் அறிமுகவிழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் நல்நூலகர் பிரமநாயகம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory