» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வயலில் களை எடுக்க புதிய இயந்திரம் அறிமுகம்

வெள்ளி 8, நவம்பர் 2019 12:34:57 PM (IST)தென்காசி அருகே வயலில் களை எடுக்க புதிய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி அருகே கொட்டாகுளம் பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நெல் வயலில் களை எடுக்க புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் செயல்விளக்கம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் தலைமை தாங்கினார். ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் உள்ள தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நிரஞ்சன உன்னி, கிரிஜா, அபிராமி , அபிநயா, பாத்திமா, பவித்ரா, ஹரிப்பிரியா, சாரதாதேவி ஆகியோர் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் வளரும் களைச் செடிகளை நீக்குவதற்கு பயன்படும் கோனோ வீடர்கள் உபயோகிக்கும் முறை பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம் வயல்களில் களை எடுக்க தேவைப்படும் வேலையாட்களின் எண்ணிக்கையையும் அதற்கான பணச் செலவை குறைப்பதோடு  ரசாயன களைக்கொல்லிகள் பயன் பாட்டையும் தவிர்க்க முடியும் என்பதைப் பற்றி விளக்கமளித்தனர். இயந்திரம் மூலம் நீக்கப்படும் களைகள் நெல் பயிருக்கு உரமாக பயன்படுவதால் விவசாயிகள் செலவைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம் என்று வேளாண்மைத்துறை  உதவி இயக்குனர் கனகம்மாள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory