» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் : நெல்லை ஆட்சியர் அழைப்பு

வெள்ளி 8, நவம்பர் 2019 1:19:35 PM (IST)

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தொடக்க நிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை மூலமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற இருக்கின்றது.  

இந்த திறன் போட்டியில் பங்கேற்க https:worldskillsindia.co.in/worldskill/world/என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2019. 

வயது வரம்பு: 01.01.1999 அன்றுஃஅல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்றவர்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து கொண்டிருப்பவர்கள், பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள் அல்லது படித்து முடித்தவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் ஆகிய அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மாவட்ட திறன் போட்டியானது 2020 ஜனவரி 6 முதல் 10-ஆம் தேதிக்குள் நடைபெற இருக்கின்றது.  போட்டியில் தனிநபராகவோ அல்லது இரண்டு பேர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் மையத்தில் வைத்து தங்களுக்கு வழங்கப்படும் கேள்வித்தாளில் உள்ள திறன் செய்முறை தேர்வினை செய்ய வேண்டும்.  இதில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள் மாநில அளவில் சென்னையில் பிப்ரவரி 2020-ல் நடைபெற இருக்கின்ற திறன் போட்டியிலும், இதுபோல் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்கள் மண்டல, இந்திய மற்றும் உலக அளவில் நடைபெறும் திறன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.  உங்களது தனித்திறனை வெளிப்படுத்த இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.தொடர்புக்கு: உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,பேட்டை, திருநெல்வேலி-10 தொலைபேசி எண்: 0462-2342432 அலைபேசி எண்: 7708676718 மின்னஞ்சல் முகவரி: dadtvl2018@gmail.com, குறிப்பு:திறன்போட்டி பட்டியலில் குறிப்பிட்டுள்ள தொழிற்திறன்களில் Mechatronics, Information Network cabling, Cloud Computing, Water Technology & Cyber Security– போன்ற தொழிற்திறனை தேர்ந்தெடுப்பவர்களின் வயது வரம்பு 01.01.1996 அன்றுஃஅதற்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory