» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

வெள்ளி 8, நவம்பர் 2019 7:02:01 PM (IST)திருநெல்வேலியில்   மாவட்ட அனைத்து துறை அரசு அலுவலக பொது தகவல் அலுவலர்கள் மற்றும் முதலாம் மேல்முறையீட்டு அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 குறித்த சட்ட விழிப்புணர்வு கூட்டம் இன்று (08.11.2019)  நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது  தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தெரிவித்ததாவது:-தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது ஒரு முக்கிய சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர்களுக்கு உரிய கால அவகாசத்திற்குள்  தகவல் வழங்கிட வேண்டும். வழங்கப்படும் தகவல் முதன்மை ஆவணம் என்பதால் சரியாக தகவலை உடனடியாக வழங்கிட வேண்டும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 குறித்த விழிப்புணர்வு கூட்டத்த்pல் உரிய கால கெடுவிற்குள் மனுதாரர்களுக்கு தகவல் வழங்கவும், தவறும் பட்சத்தில்  பொது தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவுகள் 20(1)-ன்படி அதிகபட்சமாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கவும், மற்றும் பிரிவு 20(2) ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும்  என அறிவுரை வழங்கினார்.

மேலும், மதியம் 2.30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி தொடர்பான இரண்டாம் மேல்முறையீட்டு மனுதாரர்களின் மனுக்கள் மீது  விசாரணை மேற்கொண்டார். இப்பயிலரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட அனைத்து துறை அரசு அலுவலக பொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.       


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory