» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முழு கொள்ளளவை எட்டியது கடனாநதி அணை

புதன் 20, நவம்பர் 2019 12:56:06 PM (IST)

வடகிழக்கு மழை தீவிரமடைந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள கடனாநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

நெல்லை மாவட்டம் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மிதமான மழை பெய்து வருவதால், கடனாநதி அணை ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது.85 கன அடி கொண்ட இந்த அணை மூலம் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.   இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாயப் பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது கடனாநதி அணைக்கு 148 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்து முற்றிலும் வெளியேற்றப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory