» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை அருகே விவசாயி தற்கொலை

புதன் 20, நவம்பர் 2019 1:12:44 PM (IST)

பாளையங்கோட்டை அருகே எறும்பு பொடி தின்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பாளையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் அருளானந்தம் (70) விவசாயி. இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டாராம். இதையடுத்து அருளானந்தம் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் மனைவி இறந்தில் இருந்து அருளானந்தம் தூக்கத்தில் இருந்தாராம். இதையடுத்து அவர் நேற்று எறும்பு பொடியை தின்றுவிட்டு மயங்கி விழுந்தார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அருளானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory