» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டணை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 20, நவம்பர் 2019 8:44:44 PM (IST)

நெல்லை அருகே இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நெல்லை அருகே மானுார் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவரது மனைவி சுந்தரி (30). ராமகிருஷ்ணனின் தங்கைக்கும் அதே பகுதியை சேகருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. திருமணத்தின் போது மகாலட்சுமிக்கு சுமார் 10 பவுன் நகை வரதட்சணையாக அளிக்கப்பட்டுள்ளது  

இந்நிலையில் அதிக வரதட்சணை கேட்டு மகாலட்சுமியிடம் அவர் கணவர் தகராறு செய்தாராம். இது குறித்து மகா  லட்சுமி தனது சகோதரரிடம் கூறவே ராமகிருஷ்ணனுக்கும் சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்  நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேருந்து நிறுத்தத்தில் ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சேகர் மற்றும் பெரிய மாரியப்பன் (41), சின்ன மாரியப்பன் (38), தந்தை இளையராஜா ஆகியோர் சேர்ந்து ராமகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 4வது கூடுதல் அமர்வு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார். அதில் மேற்படி 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ. 5,500 அபராதம் விதித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக துரைமுத்து வாதாடினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory