» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலி செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை : எஸ்பி.,யிடம் பவண்டோ மேலாளர் புகார்

வியாழன் 21, நவம்பர் 2019 10:42:20 AM (IST)பவண்டோ குளிர்பானம் குறித்து உண்மைக்கு புறம்பான போலி செய்திகள் சமூக வலை தளங்களில் பரப்பபடுகிறது அவ்வாறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்பி.,யிடம் காளி மார்க் நிறுவன மேலாளர் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பவண்டோ குளிர்பானம் குறித்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் காளி மார்க் நிறுவன மேலாளர் மாவட்ட எஸ்பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 103 வருடங்களாக எங்களது காளி மார்க் நிறுவனம் பொதுமக்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. பொதுமக்களிடையே எங்கள் தயாரிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது அடையாளம் தெரியாத விஷமிகள் எங்கள் நிறுவன பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகஅரசு முத்திரையுடன் காவல்துறை அறிவிப்பு என்ற பெயரில் பவண்டோ குளிர்பானங்களை குடிக்க வேண்டாம்  என்றும் இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

இதனால் பொதுமக்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பவண்டோ குளிர்பானம் குறித்து தவறான புரிதல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே பவண்டோ குளிர்பானம் குறித்து உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை பரப்பும் விஷமிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory