» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முதல்வர் உத்தரவிடுவாரா ? விவசாயிகளின் எதிர்பார்ப்பு

வெள்ளி 22, நவம்பர் 2019 10:47:58 AM (IST)

கடையநல்லூர் பகுதியில் பாப்பாங் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட வேண்டும் என பாப்பாங் கால்வாய் பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடையநல்லூர் அருகிலுள்ள கருப்பாநதி அணையில் இருந்து பாப்பாங் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு நீர் திறந்துவிடப்படுகிறது.இந்த பாப்பாங் கால்வாய்நீர் பாசனத்தால் அருணாசலபுரம், அரியநாயகிபுரம், வீரசிகாமணி, வடநத்தம் பட்டி, சேர்ந்தமரம், திருமலாபுரம்,தன்னுாத்து, குலசேகரமங்கலம், கீழகலங்கல் பகுதி குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் பாசனத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த கால்வாய் நீண்ட வருடங்களாக தூர் வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. கடையநல்லூர் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 

சென்னையில் பெரு வெள்ளம் வந்தபோது ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன் வந்தனர். பின்பு அக்கிரமிப்பு அகற்றத்தை அதிகாரிகள் கிடப்பில் போட்டு விட்டார்களாம். இதனால் பாப்பாங் கால்வாயில் தண்ணீர் திறந்தால் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் பாதிக்க படுவார்கள் என்பதால் பாப்பாங் கால்வாயில் நீர் திறக்க படாமல் ஆற்றுக்கு திறக்கப்பட்டு அனுமன் நதி வழியாக சிற்றாருக்கு சென்று இறுதியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து யாருக்கும் பயன் இல்லாமல்  கடலில் வீணாக கலக்கிறது என கூறப்படுகிறது. 

இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை கருப்பாநதி அணை நிறைந்தும் பாப்பாங் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவில்லை. விவசாயிகள் கோரிக்கைக்கு பொதுப்பணி துறை அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என தெரிகிறது. உபரி நீர் மட்டுமே கால்வாயில் வருகிறது. ஒரு சில குடும்பத்திற்க்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் வறுமையில் வாடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாப்பாங் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை தூர் வாரி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory