» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி உதயம் : முதல்வர்,துணைமுதல்வர் பங்கேற்பு
வெள்ளி 22, நவம்பர் 2019 11:15:32 AM (IST)

திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள், 2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அறிவிப்பு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு துணை முதல்வா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். மேலும் அமைச்சா்கள் உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கிவைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும் : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 7:01:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்துடன் எங்களை சேருங்கள் : அம்பை பகுதி 11 கிராம மக்கள் வலியுறுத்தல்
சனி 7, டிசம்பர் 2019 5:56:23 PM (IST)

பள்ளி குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு : போலீசார் விளக்கம்
சனி 7, டிசம்பர் 2019 1:02:21 PM (IST)

மக்கள் குறைதீா் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 11:16:42 AM (IST)

நெல்லை - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
சனி 7, டிசம்பர் 2019 11:02:14 AM (IST)
