» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டம் துவக்கம் : சுரண்டை மக்கள் உற்சாகம்

வெள்ளி 22, நவம்பர் 2019 11:55:03 AM (IST)

தென்காசி மாவட்டமாக இன்று உதயமானதை தொடர்ந்து சுரண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு சுரண்டை பகுதியில் அதிமுகவினரும்,  கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

ஏற்கனவே முதலமைச்சர் மாவட்டத்தை துவக்கி வைத்த நிகழ்ச்சியின்போது சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா கட்டிடத்தை துவக்கி வைத்தார் அதனை முன்னிட்டு சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory