» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு ஓட்டு எண்ணிக்கை : முடிவை வெளியிட 29-ம்தேதி வரை தடை

வெள்ளி 22, நவம்பர் 2019 5:39:48 PM (IST)

ராதாபுரம் தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் நவ. 29-ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையிடம் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.இன்பதுரை வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை எண்ண உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைவிதித்தது. அடுத்தடுத்து நடந்த விசாரணையின் போது தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் முடிவை வெளியிடுவதற்கான தடையை வருகிற 29-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory