» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே கார் விபத்து- 2 பேர் படுகாயம்

வெள்ளி 22, நவம்பர் 2019 6:26:08 PM (IST)

நாங்குநேரி அருகே கார் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஒ. காலனியை சேர்ந்தவர் தியாகரன் (62). தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவரும், என்.ஜி.ஒ.ஏ. காலனியை சேர்ந்த ராமசாமி மகன் ஜீவா, பழனிமுருகன் மகன் மாரியப்பன் ஆகியோரும் தியாகரனுக்கு சொந்தமான காரில் நாகர்கோவில் சென்று விட்டு நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள குறிஞ்சி நகர் விலக்கில் வந்த போது, எதிரில் ராதாபுரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஓட்டி சென்ற கார் திடீரென ரோட்டின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய 2 கார்களும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் தியாகரன் ஓட்டி வந்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த ஜீவா, மாரியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

காயம் அடைந்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory