» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் திறப்பு விழா

வெள்ளி 22, நவம்பர் 2019 7:09:11 PM (IST)சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
 
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு கட்டிடம் 2.20  கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. அதனை தென்காசி மாவட்ட தொடக்க விழாவின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மீனா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்றுப் பேசினார். தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்திய வாகீஸ்வரன், உட்கோட்ட உதவி பொறியாளர் செல்வராஜன், நல்லசிங், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், மற்றும் நிர்வாகிகள், நகர கழக செயலாளர் விகேஎஸ் சக்திவேல், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், சங்கர், இந்திரா அழகுதுரை, சிவசங்கர், ஜவகர் தங்கம், தேனம்மாள் தங்கராஜ், கண்ணன், திருமலைக்குமார்,  கீழச்சுரண்டை மாரியப்பன், ராஜேஷ், செல்வம், காசி, கோபால், ஞானசேகர், வெள்ளைச்சாமி, வெள்ளைத் துரை, ஜெயச்சந்திரன், மற்றும் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவை பேராசிரியர் பழனிச்செல்வம் தொகுத்து வழங்கினார், முடிவில் பேராசிரியர் பரமார்த்தலிங்கம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory