» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்டத்தை அடியோடு முடக்கிய கனமழை : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஞாயிறு 1, டிசம்பர் 2019 11:53:04 AM (IST)தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியாேடு முடங்கியது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக பலம் பெற்று வருகிறது. இதில் தூத்துக்குடியில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது. தூத்துக்குடியில் 163.8 மிமீ மழையும், சாத்தான்குளத்தில் 186 மிமீ குலசேகரப்பட்டணத்தில் 146 மிமீ,திருச்செந்தூரில் 100 மிமீ, காயல்பட்டணத்தில் 83 மிமீ ஸ்ரீவைகுண்டத்தில் 79.6 மிமீ, வைப்பாரில் 63 மிமீ, விளாத்திகுளத்தில் 39 மிமீ, காடல்குடி 18 மிமீ, சூரங்குடியில் 13 மிமீ, கோவில்பட்டியில் 23.5 மிமீ, கழுகுமலை 26மிமீ, கயத்தாறில் 49 மிமீ, கடம்பூர் 41 மிமீ, ஓட்டப்பிடாரத்தில் 54 மிமீ, மணியாச்சியில் 32 மிமீ, கீழஅரசரடியில் 59 மிமீ, வேடநத்தம் 10 மிமீ, எட்டயபுரத்தில் 18 மிமீ மழை பெய்தது.

கடந்த 12 மணி நேரத்தில் 1201.90 மிமீ தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவானது. தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், வயல்வெளிகள் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்று நீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாமென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 


தொடர்மழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்திமரப்பட்டி, காலாங்கரை பாலத்தின் மேல் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பாரதிநகர், காலாங்கரை, பகுதிகளிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

விடிய விடிய பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. தூத்துக்குடி கீழுர் ரயில்வே நிலையத்தில் தண்டவாளத்தில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதால் தூத்துக்குடி வந்த ரயில்கள் மேலுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில் பராமரிப்பு பணிக்காக திருநெல்வேலிக்கு சென்றன. தூத்துக்குடியிலிருந்து செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. திருச்செந்தூர் பயணிகள் ரயில் 4வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்செந்தூர் பயணிகள் ரயிலும் இணைக்கப்பட்டு 10 மணியளவில் கிளம்பி சென்றது. மணியாச்சி சென்றதும் ரயில்கள் பிரிக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் சிரமம் அடைந்தனர். அது போல் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்து நிலையம் சேறும் சகதியுமானது. இதனால் வெளியே பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்ததில் முத்தம்மாள் காலனி, ராஜீவ்நகர் , ராஜகோபால்நகர்,ஸ்டேட்பாங்க்காலனி, பிஅன்டி காலனி, கோவில்பிள்ளைநகர், சுந்தரவேல்புரம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வாகனம் ஓட்ட முடியாதபடி தண்ணீர் தேங்கியுள்ளது. 3000க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

மாப்பிள்ளையூரணி ,அழகாபுரி உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டுஓடுவதால் 20 கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. கனமழையால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை. போல்டன்புரம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், இருசக்கர வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். தூத்துக்குடி ஆட்சியர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். கனிமொழி எம்பி., வெள்ள பாதிப்புகளை பார்வையிட தூத்துக்குடி வருகிறார்.

முத்தம்மாள் காலனி 7வது தெருவில் மழைநீர் வீட்டில் புகுந்து வீட்டிலிருந்து வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி ஸ்டேட்பாங்க் காலனி 60 அடி சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் திருச்செந்தூர் ரோடு, போல்டன்புரம், அம்பேத்கர் காலனி, ஏழுவீடு காலனி, வெள்ளத்தால் சூழப்பட்டதால் பொதுமக்கள் சுடலை காலனி பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆய்வுதூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டார். அவருடன் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

MurukandiDec 2, 2019 - 07:11:22 PM | Posted IP 162.1*****

Smpuram 5street pakuthil waterka iruku sakadai neerum irupathal tharukael nadakamudiyavillai ple action eduka sir ple

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory