» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் தற்காெலை
ஞாயிறு 1, டிசம்பர் 2019 12:34:19 PM (IST)
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் தினேஷ்குமார் (23). வெல்டிங்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். தினசரி இவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இதை இவரது தந்தை கண்டித்ததால் விரக்தியடைந்த தினேஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் வேல்முருகன் (46). கூலிதொழிலாளி. இவர் தினசரி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இதை இவரது மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த வேல்முருகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலிபர் தற்காெலை
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் காசிபாண்டி மகன் சுப்புராஜ் (35). இவர் தினசரி அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். நேற்றும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தூங்கியவர் இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
அருண்Dec 2, 2019 - 10:58:32 AM | Posted IP 108.1*****
இப்படி கவெர்ன்மென்டுக்கு அநியாயமா வருமானம் போச்சே. 😏
TAMILANDec 1, 2019 - 09:43:57 PM | Posted IP 162.1*****
kudi kudiyai keddukkum.
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும் : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 7:01:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்துடன் எங்களை சேருங்கள் : அம்பை பகுதி 11 கிராம மக்கள் வலியுறுத்தல்
சனி 7, டிசம்பர் 2019 5:56:23 PM (IST)

பள்ளி குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு : போலீசார் விளக்கம்
சனி 7, டிசம்பர் 2019 1:02:21 PM (IST)

மக்கள் குறைதீா் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 11:16:42 AM (IST)

நெல்லை - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
சனி 7, டிசம்பர் 2019 11:02:14 AM (IST)

A.S.RAJDec 3, 2019 - 08:19:50 AM | Posted IP 162.1*****