» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசார் சார்பில் கண் மருத்துவ முகாம் : டிஎஸ்பி துவக்கி வைத்தார்

திங்கள் 2, டிசம்பர் 2019 10:16:16 AM (IST)வீரகேரளம்புதூரில் போலீசார் மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை  முகாமினை ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹிர் ஹுசைன் துவக்கிவைத்தார்.

போலீஸ் மற்றும் பொதுமக்கள்  நல்லுறவை மேம்படுத்தும் விதமாக  வீரகேரளம்புதூரில் போலீசார் சார்பில் நடந்த கண் சிகிச்சை முகாமை, சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி முன்னிலையில், ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹிர் ஹுசைன் ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.முகாமில் நெல்லை அகர்வால் கண் மருத்துவர்களால் 120 பேர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. 22 பேர் இலவச அறுவை சிகிச்சைக்காக நெல்லை அகர்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாகனங்களை ஓட்டும் போது கடை பிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் தலைக்கவசம் அணிதல், குடிபோதையில் மற்றும் செல்போன் பேசிக் கொண்டும் வாகனம் ஓட்டாமல் இருத்தல், போதை பொருட்களை பயன்படுத்தாது இருத்தல், குற்றச்செயல்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை போலீசார் மேற்கொண்டனர். விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய துண்டு  பிரசுரங்களையும் விநியோகித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை  சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மேற்பார்வையில், வீரகேரளம்புதூர் எஸ்ஐ பாரத் லிங்கம், சந்திரசேகரன் மற்றும் முருகன் ஆகியோர் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory