» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.யில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 10:58:44 AM (IST)

பாளையங்கோட்டையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சுமார் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை, தியாகராஜ நகரைச் சோ்ந்த உச்சிமாகாளி மனைவி பிரம்மாட்சி(37). இவா் சம்பவத்தன்று இரவு அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், பிரம்மாட்சி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory