» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கன மழையால் உடைந்த கால்வாய் தடுப்பு சுவர் : உடனடியாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை

திங்கள் 2, டிசம்பர் 2019 11:23:23 AM (IST)சுரண்டையில் கனமழையால் செண்பக கால்வாய் தடுப்பு சுவர் உடைந்தது. அதை உடனே கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் சுரண்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுரண்டை சுற்றியுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையில் இரட்டை குளம் நிரம்பியதால் செண்பக கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. இதில் ஏற்கனவே பலமிழந்து காணப்பட்ட செண்பக கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஏற்கனவே சுரண்டையில் இருந்து சாம்பவர் வடகரை வழியாக தென்காசி மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலை என்பதால் பேராபத்து நிகழும் முன் இடிந்து விழுந்த செண்பக கால்வாய் தடுப்பு சுவரை சரி செய்து ரோட்டை அகலப்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சுற்றுச் சுவரை சரி செய்து மேலும் பொதுமக்கள் நலன் கருதி ரோட்டிலிருந்து மூன்று அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அல்லது தடுப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும், ஏற்கனவே கடந்த 1998 ல் கட்டப்பட்ட இந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதியில் இடிந்து விழுந்த நிலையில் அடுத்த பகுதியும் இடிந்துள்ளது தொடர்ந்து இடியுமோ என்ற அச்சத்தை இதில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கோவில், தேவாலயம், திருமணமண்டபம், கனரக வாகனங்கள் செல்லும் பகுதி என்பதால் விரைந்து சீர்செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory