» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேரளாவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தல் : 16 டன் அரிசி பறிமுதல்

திங்கள் 2, டிசம்பர் 2019 12:13:21 PM (IST)தென்காசி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் புளியரை வழியே கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தி லாரி 16 டன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் உத்தரவின்பேரில் தமிழக-கேரள எல்லையான புளியரை, செங்கோட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் புளியரை சோதனைச்சாவடி பகுதியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளாவுக்கு செல்ல முயன்ற ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரியில்  அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதனை சோதனை செய்தபோது அந்த அரிசி தமிழக ரேசன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு  இலவசமாக விநியோகம் செய்ய வழங்கப்படும் ரேசன் அரிசி என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த லாரியையும் லாரியை ஓட்டி வந்த டிரைவரையும் போலீசார் கைது செய்து புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடைபெற்ற தீவிர விசாரணையில் லாரியில் இருந்த ரேசன் அரிசி ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரள மாநிலம் குண்டரா பகுதிக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சங்கர பாண்டியன் என்பவரது மகன் ரங்கசாமி என்பதும் தெரியவந்தது.உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய லாரி மற்றும் அதில் இருந்த 16 டன் ரேசன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு லாரி டிரைவர் ரங்கசாமியையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட  16 டன் ரேசன் அரிசியை  போலீஸார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory