» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் இடைவிடாமல் பெய்த மழை: தாமிரபரணி கரையோர மக்கள் வெளியேறினர்

திங்கள் 2, டிசம்பர் 2019 1:30:50 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு வரை நீடித்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை வரையிலும், நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரையிலும் தொடர்ச்சியாக மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 110 மி.மீ. மழை பெய்திருந்தது. ஏற்கெனவே அணை நிரம்பியிருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 14,270 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

இதனால் கல்யாண தீர்த்தம், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.தாமிரபரணி ஆற்றில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. பாபநாசம் படித்துறை மூழ்கி யது. அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, சேரன்மகாதேவி பகுதி களில் ஆற்றங்கரையோர படித் துறைகள், திருநெல்வேலியில் தைப்பூச மண்டபம், படித்துறைகள் மூழ்கின. 

திருநெல்வேலி குறுக்குத் துறை முருகன் கோயில் மண்டபம் மற்றும் கோபுரம் மூழ்கும் அள வுக்கு வெள்ளம் கரைபுரண்டது. தாமிரபரணியில் வெள்ளம் காரண மாக, திருநெல்வேலி மீனாட்சி புரத்தில் ஆற்றங்கரை யோரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாது காப்பான இடங்களுக்கு சென்ற னர். கருப்பந்துறை ஆற்றுப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. 

திருக்குறுங்குடி நம்பி யாற்றிலும் வெள்ளம் கரைபுரண் டது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள பாலம் மூழ்கியது. கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory