» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இனி நூறு சதவீதம் மழைநீர் தேங்காது : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உறுதி

திங்கள் 2, டிசம்பர் 2019 5:04:51 PM (IST)தூத்துக்குடி மாநராட்சி பகுதியில் வரும் காலங்களில் நூறு சதவீதம் மழை நீர் தேங்காதவாறு ரூ.74 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில், கதர்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  குமார் ஜெயந்த், முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு கதர்துறை முதன்மை செயலாளர்; குமார் ஜெயந்த், அவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, அவர்களும் கண்காணித்து வருகிறார்கள். 

பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மடை இயப்பு அளவைக் காட்டிலும் சுமார் 30 சதவிதம் அதிகளவில் பெய்துள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் அனைத்து ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாறப்பட்டு வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய்கள் நீர் நிலைகள் 90 சதவிதம் நிரம்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சாத்தான்குளம் பகுதியில் 18 செ.மீ., தூத்துக்குடி பகுதியில் 16 செ.மீ. என அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஓரிரு இடங்களில் ஏற்பட்டுள்ளது. 

போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டிருந்ததாலும், ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை. 54 குடிசைகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆக்கப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற 47க்கும் மேற்பட்ட இடங்களில் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் ரயில்வே துறை, ஸ்பிக், துறைமுக மேம்பாட்டு கழகம் மூலம் கூடுதலாக மோட்டார்கள் பெறப்பட்டு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2015 வெள்ளத்திற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு மேலும் பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. 

மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காது தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். ஓரிரு தினங்களுக்குள் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு சரி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோர், தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சிநகர் மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரினை மாநகராட்சி மூலம் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டனர். 

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), கீதாஜீவன் (தூத்துக்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வி.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.பரிதா செரின், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

YENKEDec 3, 2019 - 02:37:59 PM | Posted IP 108.1*****

90% thaan thengumunnu sollavarraaru; BETTER thaane..

kanthanDec 3, 2019 - 01:36:50 PM | Posted IP 162.1*****

inimel adutha varusham paakkalaam. athu varai BIMBILIKA PILAPEE...........

DeepakDec 3, 2019 - 01:31:06 PM | Posted IP 162.1*****

தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மூன்று நாள்கள் ஆகும் : தூத்துக்குடி மாவட்டஆட்சியர் பேட்டி http://tutyonline.net/view/31_186757/20191203120217.html

DeepakDec 3, 2019 - 11:42:59 AM | Posted IP 162.1*****

பெஸ்ட் காமெடி ஒப்பி தி இயர் 2019

VijayanDec 3, 2019 - 11:05:58 AM | Posted IP 108.1*****

sariyana thittangal illayendral smart city chakkada city ayidum...

ஒருவன்Dec 3, 2019 - 10:54:44 AM | Posted IP 108.1*****

அடேய் .. ஒவ்வொரு வீட்டிலும் , தெருவிலும் கிணறுகள் அமைத்து பாருங்கள்..மழைநீரை சேமிப்போம் ..

ஒருவன்Dec 3, 2019 - 10:53:29 AM | Posted IP 108.1*****

கிணறுகள் அமைக்காதது தான் காரணம் உண்மைதான்

சாமான்யன்Dec 2, 2019 - 09:23:03 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி யின் கடல் மட்டமே, பாதாள சாக்கடைத் திட்டத்தின் தோல்விக்கு காரணம். எந்த திட்டமும் ஆளும் கட்சி பணம் சம்பாதிக்கவே பயன்படும்.

MartinDec 2, 2019 - 08:21:38 PM | Posted IP 173.2*****

Yenda...neenga aatchi la irukkum pothu thaan ithuku munnadi vellam vanduchu...naalu varusham aachu...oru aaniyum pudungala....innum appadiye irukuthu

அந்தோணி சாமிDec 2, 2019 - 06:55:26 PM | Posted IP 162.1*****

சரியான கருத்து

இவன்Dec 2, 2019 - 06:25:35 PM | Posted IP 173.2*****

இட்ஸ் 1௦௦% ட்ரு

AAAPDec 2, 2019 - 06:22:16 PM | Posted IP 108.1*****

ENNADHU MEMBADUTHAPATTA PAADHALAI CHAKKADAI THITTAMA .LOOSUNGALAYA NEENGELLAM.NIIKIRA EDATHILIRUNTHU ORU CUPPU THANNIYA KUDICHITTU APPADIYE POITEENGANNA THANNI THANAGAVE VADINTHUVIDUM.

தமிழ்ச்செல்வன்Dec 2, 2019 - 05:12:24 PM | Posted IP 108.1*****

ஆளும் கட்சி காரங்க இப்படி சொல்லி மக்களை ஏமாற்றுவது வாடிக்கைதான்! முன்னூறு ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போட்டவங்க தண்ணிக்குள்ள கெடந்தா என்ன? வென்னிக்குள்ள கெடந்தா நமக்கு என்ன?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory