» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்வலைகள் அடித்து செல்லப்பட்டது : நெல்லை ஆட்சியரிடம் புகார்

திங்கள் 2, டிசம்பர் 2019 5:34:54 PM (IST)திருநெல்வேலியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்வலைகள் அடித்து செல்லப்பட்டது எனவும் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென நெல்லை ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

நெல்லை பேட்டை மற்றும் சுத்தமல்லியை சேர்ந்த உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் சங்க தலைவர் முருகன் தலைமையில் தாங்கள்  தாமிரபரணி ஆற்றில் மீனுக்காக வலை விரித்ததாகவும் தற்போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தங்களது ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன் வலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர் .உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அங்கு வைத்திருந்த பெட்டியில் மனுவை போட்டு விட்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory