» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மக்கள் குறைதீர்க்கும் நாள் ரத்து

திங்கள் 2, டிசம்பர் 2019 6:25:13 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் ரத்து செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் கடந்த மாதம் 25ம் தேதி முதன் முதலாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தென்காசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்றை தினம் பொதுமக்களிடம் இருந்து 1200 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் இரண்டாவதாக இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலையில் இருந்தே முகாம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் காலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த உடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனால் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறவில்லை. வந்திருந்த பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்காக தனியாக மனுப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மனுப் பெட்டிகளில் பொதுமக்கள் மனுக்களை போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆலோசனையின் பேரில் போலீசார் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory