» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதுகேளாதோர் திருப்பணி கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை

வியாழன் 5, டிசம்பர் 2019 11:13:31 AM (IST)
நெல்லை மாவட்டம் பங்களாசுரண்டையில் காதுகேளாதோர் திருப்பணியின் சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனையை சார்லஸ் துவக்கி வைத்தார்.

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல நிர்வாகத்திற்குட்பட்ட  பங்களாச் சுரண்டை காதுகேளாதோர் திருப்பணியின் மூலமாக நடைபெற்று வரும் தொழில் மையத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனையாக கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், குடில்கள்,வண்ண பொருட்களும் கிறிஸ்துமஸ் கேக் வகைகள் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. 

விழாவிற்கு பேரன்புரூக் பள்ளி தாளாளர் தனபால் தலைமையேற்றார். தமாகா மாநில செயலாளரும் மூத்த நிர்வாகியுமான பரன்குன்றாபுரம் என்டிஎஸ் சார்லஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்து பேசினார். வடக்கு சபை மன்ற தலைவரும் பேரன்புரூக் கல்லூரியின் தாளாளருமான வில்சன் சாலோமோன் ராஜ் சிறப்பு ஜெபம் செய்தார்.

முதல் விற்பனையை பேரன்புரூக் பள்ளி தலைமையாசிரியர் சவுந்தரராஜன் துரை பெற்றுக் கொண்டார். உதவி தலைமையாசிரியர், மாசிலாமணி, பேரன்புரூக் பிரைமரி நர்சரி பள்ளி தலைமையாசிரியை, ஜென்சி உமா, புதுச்சுரண்டை சேகர குரு ராஜகுமார் மற்றும் சார்லஸ், அமல்ராஜ், மன்னா செல்வகுமார் விற்பனை பிரிவு மேலாளர் பவுல்ராஜ் உடனிருந்தனர் காதுகேளாதோர் திருப்பணி இயக்குனர் மார்டின் நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory