» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை அருகே ஊருக்குள் வந்த மான்குட்டி

வியாழன் 5, டிசம்பர் 2019 12:05:24 PM (IST)தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழியில் ஊருக்குள் வந்த சருகு மான்குட்டியை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள பண்மொழி ஊருக்குள் வந்த அரிய வகை சருகு மான்குட்டியை பொதுமக்கள் பிடித்தனர். உடனடியாக இதுபற்றி கடையநல்லூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் அறிவுரையின் பேரில் மேக்கரை பீட் வனவர் அருமைக்கொடி மற்றும் வனக்காவலர்கள் பண்பொழி பகுதிக்கு வந்து பொது மக்கள் பிடித்து வைத்திருந்த சருகு மான் குட்டியை கூண்டில் அடைத்து மேக்கரை காட்டுப்பகுதியில் விட்டனர். அரியவகை சருகு மான் குட்டியை பிடித்து பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்த பண்பொழி ஊர் பொதுமக்களுக்கு  வனத்துறையினர் நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory