» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மாதிரி உயிர்உர செயல் விளக்கத்திடல் : வேளாண் உயர்அலுவலர் நேரில் ஆய்வு

வியாழன் 5, டிசம்பர் 2019 12:23:46 PM (IST)தென்காசியில் பகுதியில் உயிர்உர செயல் விளக்கத்திடலை வேளாண் உயர்அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் தென்காசி  அருகே உள்ள வல்லம் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கனகம்மாள் ஆலோசனையின் பேரில்  முன்மாதிரி உயிர் உர செயல் விளக்க முன் மாதிரி திடல் அமைக்கப்பட்டுள்ளது.  உயிர் உர உற்பத்தி மைய மூத்த வேளாண்மை அலுவலர் நபிஷா  நேரில் கள ஆய்வு செய்து அதன் பயன்கள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.

இந்த கள ஆய்வு பணியில் திருந்திய நெல் சாகுபடி நடவு செய்துள்ள முன்னோடி வேளாண் பெருமக்களிடம் உயிர் உரத்தை விதை நேர்த்தி செய்வதின் மூலமாகவும் நடவு  திடல்களில் தொழு உரத்துடன் கலந்து இடுவதினால்  இரசயான உரச்செலவை 25 சதவீதம் குறைக்கலாம்.உயிர் உரங்கள்  பயன் படுத்துவதால் காற்றிலுள்ள நைட்ரஜன் மண்ணில் நிலைநிறுத்தி தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு கிடைக்கசெய்கிறது.
 
உயிர் உரங்கள்  இடுவதினால் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகிறது. பயிர்கள் நன்கு வறட்சி  தாங்கி வளரும். பயிர்கள் அதிக வளர்ச்சி அடைகிறது.பயிர்கள் அதிகமான பூக்களை கொடுக்கிறது.பயிர்கள் பூக்கள் உதிர்வதை தடுக்கிறது. மண்ணில் இடுவதினால் மண்ணிலுள்ள நுண்ணீயிர்கள் பெருக்கம் அடைந்து  மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. உயிர் உரங்கள் இடுவதினால் அதிகமான மகசூலும்  கூடுதலான வருமானமும் கிடைக்கிறது..ஆகவே வேளாண் பெருமக்கள்  இரசாயன உரங்களை தவிர்த்து  உயிர் உரங்களை  அதிகளவு பயன் படுத்துமாறு கேட்டு கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory