» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளிக்கு ஆபத்தான முறையில் செல்லும் மாணவர்கள்

வியாழன் 5, டிசம்பர் 2019 12:59:25 PM (IST)

நெல்லை மாவட்டம் மாவடியில் தடுப்பணை சுவரை பிடித்து கொண்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். உடனே தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களை ஆபத்திலிருந்து காக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியிலுள்ள பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் நாங்குநேரி வழியாக 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் நம்பியாறு வழியாக சென்றால் அரைகிலோ மீட்டர் தூரமே உள்ளது.இதை கருதி, அந்த ஆற்றின் மீது பாலம் கட்ட ஓராண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆனால் அந்த பணிகள் நடைபெறாததால், ஆற்றில் உள்ள தடுப்பணை சுவரை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்.நம்பியாற்றில் தண்ணீர் அதிகரித்தால் பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. இதனால் பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory