» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜெ. திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி

வியாழன் 5, டிசம்பர் 2019 5:50:50 PM (IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தென்காசி மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வினர் ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருப்படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர். குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமார் பாண்டியன் தலைமை தாங்கி ஜெயலலிதா திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குற்றாலம் செயலாளர் அசோக் பாண்டியன், அம்மா பேரவை இணை செயலாளர் சாமிநாதன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசியில் நகர செயலாளர் சுடலை தலைமையிலும், மேலகரத்தில் நகர செயலாளர் கார்த்திக்குமார் தலைமையிலும், செங்கோட்டையில் நகர செயலாளர் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி தலைமையிலும், இலஞ்சியில் மயில் வேலன் தலைமையிலும், தென்காசி ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையிலும், செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமையிலும் மற்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா திருவுருப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory