» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செல்போன் பயன்பாட்டை மாணவிகள் தவிர்க்க வேண்டும் : செங்கோட்டை நீதிபதி அறிவுரை

வியாழன் 5, டிசம்பர் 2019 6:08:06 PM (IST)டி.வி.நிகழ்ச்சிகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை மாணவிகள் தவிர்க்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு முகாமில் செங்கோட்டை நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை பேசினார்.

செங்கோட்டை எஸ்ஆர்எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் 11ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான மாரிக்காளை தலைமை தாங்கினார்.அரசு குற்றத்துறை வழக்கறிஞர் பரணிந்தர், காவல் சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் இவாஞ்சலின்டேவிட் வரவேற்று பேசினார்.

மூத்த வழக்கறிஞர் ஆதிபாலசுப்பிரமணியன் போக்குவரத்து சட்டவிதிகள் குறித்தும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் தீர்வு குறித்து பேசினார்.சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி காவலன் ஆப் குறித்து மாணவிகளிடம் விளக்கி கூறினார். மேலும் மாணவியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல் துறையிடம் உடனடியாக புகார் அளித்து தீர்வு தேடிக்கொள்ள அறிவுறுத்தினார்.

நீதிபதி மாரிக்காளை பேசியதாவது, மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டு நல்வழியில் நடந்திடவும், தினமும் செய்திதாள் வாசிப்பது, நல்ல புத்தகங்களை வாங்கி படித்து தங்களது திறமைகளை வளர்த்து கொள்ளவும், டிவி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது, செல் போன் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும்படியும், உயர்ந்த லட்சியங்களை கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். 

உங்கள் நலன்மீது அக்கறை கொள்வதற்கு உங்கள் பெற்றோர்களை தவிர வேறு யாரும் உங்களுக்கு உதவிட முடியாது. எனவே பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் என்னை போல ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியும். வாழ்க்கை என்பது நீங்கள் எழுதும் தேர்வு போல இல்லை. ஒரே வினாத்தாள் அனைவருக்கும் வழங்கபட மாட்டாது. ஒவ்வொருவருக்கும் தனிதனியே வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே மற்றவரை போல நாம் நம் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. 

நமது குடும்பம், சமுதாயம், பெற்றோர்களின் நிலை என பல விபரங்கள் அதில் அடங்கி உள்ளது. குறிப்பாக இந்த வளர்இளம்பெண் பருவத்தில் உண்டாகும் போலியான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உயர்ந்த லட்சியத்திற்கு மட்டுமே நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் மோசமான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்த செய்கிறது. 

நீங்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அந்த வகை கொடுமைகளிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார். உதவி தலைமைஆசிரியர் பிச்சம்மாள் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory