» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

சனி 7, டிசம்பர் 2019 11:02:14 AM (IST)

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு வரும் 9 ம் தேதி திருநெல்வேலியிலிருந்து   சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், வரும் 10 ம் தேதியன்று நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை தீபம்திருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலி, வள்ளியூர், தியைன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்,கோவில்பட்டி  ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) வ.து., திருநெல்வேலி மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலம்  மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, பேருந்துகள் 09.12.2019 அன்று மாலை புறப்பட்டு  திருவண்ணாமலைக்கு 10.12.2019  அன்று  காலை   சென்றடையும் படியும்,  10.12.2019 அன்று மாலை காhத்திகை தீபம் ஏற்றியபின் இரவு திருவண்ணாமலையிருந்து திரும்பி வரும்படியாகவும் இயக்கப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory