» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் குறைதீா் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

சனி 7, டிசம்பர் 2019 11:16:42 AM (IST)

தமிழக தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்கள் குறைதீா் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா்  தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 2-ஆம் தேதி முதல் அமலில் இருந்தது.தற்போது தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

எனவே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் திங்கள்கிழமைதோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், வருவாய்த் துறையினரால் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஆகியவை வழக்கம் போல் நடைபெறும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory