» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்துடன் எங்களை சேருங்கள் : அம்பை பகுதி 11 கிராம மக்கள் வலியுறுத்தல்

சனி 7, டிசம்பர் 2019 5:56:23 PM (IST)அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள 11 கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் சேர்க்காமல் நெல்லை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அம்பாசமுத்திரம் வட்டம் நெல்லை மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் அம்பாசமுத்திரம் வட்டம் ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்தைச் சேர்ந்த இடைகால், அடைச்சாணி, பள்ளக்கால் புதுக்குடி, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட 11 கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் சேர்க்காமல் நெல்லை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி 11 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தென்காசி மாவட்டத்தில் தங்கள் கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமங்களுக்கு தாங்கள் ஆட்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory