» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும் : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

சனி 7, டிசம்பர் 2019 7:01:42 PM (IST)

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என மாவட்டஆட்சியர்  அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடத்துவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிச 2 முதல் முதல் அமலில் இருந்தது.  தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்படி தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தென்காசி மாவட்ட ஆட்சியரால் திங்கள்கிழமை தோறும் நடத்தப்பெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் தென்காசி நகரம் சுப்பாராஜா திருமண மண்டபத்தில் வைத்து 9.12.2019 திங்கள்கிழமை அன்று வழக்கம் போல் காலை 11 மணிக்கு நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது. மேலும் வருவாய்த்துறையினரால் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம் ஆகிய முகாம்களும் வழக்கம் போல் நடைபெறும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory