» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)தென்காசி  காசிவிசுவநாதர் கோவிலில் சிவனடியார் சதாசிவம் எழுதிய சைவ சமய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தைச் சேர்ந்த சிவனடியார் சதாசிவம் இயற்றிய சேக்கிழார் காட்டும் சிவனடியார் பெருமாண்பு  என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் வெளியிட்ட நிலையில் நூலாசிரியர் சிவனடியார் சதாசிவத்திற்கு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சிறந்த சமய நூல் ஆசிரியருக்கான சேக்கிழார் விருதும் பொற்கிழியும் வழங்கியது.

அதனை தொடர்ந்து  தற்போது அதன் மூன்றாம் பாகம் நூல் வெளியீட்டு விழா தென்காசி காசி விஸ்வநாதர் நடராஜர் சன்னதியில் பூஜை செய்யப்பட்டு நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தினர்,  சிவனடியார் திருக்கூட்டம், சமய சான்றோர்கள்,  மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் திருவள்ளுவர் கழக இணைச் செயலாளர் சந்திரசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory