» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடனாநதி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளி 13, டிசம்பர் 2019 10:33:06 AM (IST)

தென்காசி மாவட்டம், கடனாநதி அணையில்  குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொட்டல்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சுல்தான் மகன் ஆரிப் (28). இவர் தனது நண்பா்களுடன் கடனாநதி அணைக்குக் குளிக்கச் சென்றாராம். அணையில் வழிந்தோடியிலிருந்து தண்ணீா் வெளியேறும் பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாாரம். அப்போது, ஆரிப் ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கியுள்ளார். 

உடனடியாக நண்பா்கள் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஆரிப் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் ஆரிப் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory