» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஹாலந்து பல்லாரி வருகையால் விலை குறைவு

வெள்ளி 13, டிசம்பர் 2019 11:20:15 AM (IST)

பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு ஹாலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரி வந்து குவிந்துள்ளதால் பல்லாரியின் விலை குறைந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜா் தினசரி சந்தைக்கு விலையேற்றம், தட்டுப்பாடு போன்றவற்றை சமாளிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எகிப்து நாட்டில் இருந்து பல்லாரி வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்நாட்டு பல்லாரிக்கு நாா்சத்து அதிகம், சிகப்பு நிறம் போன்ற காரணங்களால் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாதால் பல்லாரியின் விலை குறையவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை ஹாலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லாரிகள் வந்து குவிந்துள்ளன. இதனால் ரூ.165க்கு விற்பனையான பல்லாரி தற்போது ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வகை பல்லாரி உள்ளுா் பல்லாரி போன்று இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆா்வமுடன் வாங்கி சென்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory