» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 1:34:22 PM (IST)பாளையங்கோட்டை பேருந்து நிலைய புதிய கட்டிடத்தில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க கோரி பாளை சித்தா மருத்துவ கல்லூரி முன் பாளை பேருந்து நிலைய வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். 

பாளை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தை முன்னாள் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் மாலைராஜா துவக்கி வைத்தார். பாளை பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு மாற்று கடை வழங்கும் வரை கால அவகாசம் வழங்கிடவும், அனைத்து வியாபாரிகளுக்கும்  பாதுகாப்பான மாற்று கடைகள் ஒரே இடத்தில் ஏற்படுத்தி தந்திடவும். புதிய கட்டுமான பணி முடிந்த பின் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைவருக்கும்  முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள்  நிறைவேற்றி உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. 

நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஜே.எம்.சாலமோன் உண்ணாவிரதத்தை பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார். பாளை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க பொருளாளர் சேக் முகம்மது நன்றி கூறினார்


மக்கள் கருத்து

ssaamiDec 13, 2019 - 04:23:12 PM | Posted IP 49.20*****

மாலை ராசாவுக்கு வியாபாரத்தோடு என்ன சம்பந்தம் - எதையாவது சொல்லி பிரச்சினை பண்ணி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் - பாவம் வியாபாரிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory