» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மோதியதில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 6:04:52 PM (IST)

நெல்லை வண்ணார்பேட்டையில் பைக் மோதியதில் நடந்து சென்ற போக்குவரத்துக்கழக ஊழியர் படுகாயம் அடைந்தார்.

நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரிந்து வருபவர் மயிலன்  பால் மணி 52. இவர் வள்ளியூர் காமராஜ் நகர் டிபி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இன்று காலை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி பணிமலை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த பாளை பொட்டலை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் பொன்னுத்துரை (19) என்பவர் பைக் மோதியதில் பால் மணி படுகாயமடைந்தார். 

அதேபோல் பொன்னுத்துரையும் கீழே விழுந்து காயமடைந்தார் அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory