» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு வாங்கி தருவதாக பெண்ணிடம் 1.28 லட்சம் மோசடி : 2 பேர் மீது வழக்கு

வெள்ளி 13, டிசம்பர் 2019 6:41:14 PM (IST)

நெல்லை பேட்டையில் வீடு வாங்கி கொடுப்பதாக ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நெல்லை தச்சநல்லூர் அடுத்த ராமையன்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி குண செல்வி (44). இவரிடம் பேட்டை கருங்காடு ரோட்டை சேர்ந்த குமார் (45) பத்தமடை யைச் சேர்ந்த முகமது ஜாபர் அலி (42) ஆகியோர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதற்காக அவரிடம் ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கடந்த 2018ம் ஆண்டு வாங்கி உள்ளனர். 

ஆனால் பலமுறை அவர்களிடம் கேட்டு வாங்கி கொடுக்கவில்லையாம். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் குண செல்வியை மிரட்டினார்கள். இதுகுறித்து குண செல்வி பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory