» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கஞ்சா-லாட்டரி விற்பனை 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

வெள்ளி 13, டிசம்பர் 2019 7:15:00 PM (IST)

நெல்லையில் கஞ்சா லாட்டரி விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா மாநகர துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கஞ்சா கடத்தல் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கல்லிடைக்குறிச்சி போலீசார் கீழே ஏர்மாள் புரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற செல்வம் 48 என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகளும் , பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் முன்னீர்பள்ளம் போலீசார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (42) என்பவரிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.மற்றொரு சம்பவத்தில் தாழையூத்து போலீசார் சுடலை வடிவு (70), ராமலட்சுமி (56) என்பவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா படங்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். 

சேரன்மகாதேவியை சேர்ந்த சண்முகசுந்தரி (35) செல்வி (35) ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். பாளை போலீசார் திருநாவுக்கரசுநாயனார் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (48) என்பவரை மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து நம்பர் சீட் லாட்டரி மற்றும் 120 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory